ஈரோடு மாவட்டத்தில் கலப்பட உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் கலப்பட உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை
X

உரம் - கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டத்தில் கலப்பட உரங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கலப்பட உரங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு பயன்படுத்த ஏதுவாக, யூரியா உரம் 2,936 டன், டி.ஏ.பி., 4,006 டன், பொட்டாஷ் 2,671 டன், காம்ப்ளக்ஸ் 13,961 டன், சூப்பர் பாஸ் பேட் 965 டன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், உரங்களின் அதிக பட்ச விற்பனை விலை, இருப்பு விபரத்தை விலைப்பலகையில் எழுதி, கடை முன் விவசாயிகளுக்கு தெரியும் படி வைக்க வேண்டும்.

விற்பனை ரசீதில் விவசாயிகளின் கையொப்பம் பெற்று உரங்களை வழங்க வேண்டும். அனைத்து விற்பனையும், விற்பனை முனைய கருவி மூலமே செய்து, உரிய முதன்மை சான்று படிவங்களை நிறுவனங்களிடம் இருந்து பெற்று, உரங்களை கொள்முதல் செய்து, அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைக்க வேண்டும்.

உரங்களுடன் சேர்ந்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. பயிர்களின் உணவாக கருதப்படும் உரங்களில், கலப்படம் செய்து விற்கக்கூடாது. தவறும் பட்சத்தில் உர விற்பனை நிலையம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனையில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநர்களிடம் புகார் செய்யலாம் என தெரிவித்துள்ளார்

மேலும், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன் பெறலாம். ஈரோடு, திண்டலில் உள்ள வேளாண் துறை மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து, அவர்கள் பரிந்துரைப்படி ஏற்ற உரங்களை பயன்படுத்தி, உரச்செலவை குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்