ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் 52ம் ஆண்டு விளையாட்டு விழா

Erode news- ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் எடுக்கப்பட்ட படம்.
Erode news, Erode news today- ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் 52வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பில், 52வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாற்கு, தி முதலியார் அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சங்கர சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். உடற்கல்வித்துறை இயக்குநர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வாலிபால் விளையாட்டு வீரர் செல்வம் (மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பெரியார் நகர் கிளை) கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
தி முதலியார் அறக்கட்டளையின் பொருளாளர் விஜயகுமார் மற்றும் துணைத் தலைவர்களான முருகேசன், மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், இணைச்செயலர் அருண்குமார் பாலுசாமி மற்றும் கல்லூரியின் இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப்பை திவ்யாவும், ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன்ஷிப்பை முத்துகிருஷ்ணனும், பெற்றனர்.
மேலும், ஆண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக நவீன்குமார், சிறந்த விளையாட்டு வீராங்கனையாக ஜோதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu