ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு

Erode news- ஈரோடு தந்தை பெரியார் தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு வார்டு.
Erode news, Erode news today- ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக 105 டிகிரி வெயில் சுட்டெரிப்பதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வெயிலின் காரணமாக ஏற்படும் வெப்ப அழற்சி நோயினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு தந்தை பெரியார் தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் குளிர்சாதன படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அம்பிகா சண்முகம், தேசிய நலக்குழும ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முகமது அப்ஸர் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா ஆகியோர் தலைமையில் சிறப்பு டாக்டர்கள் இந்த வார்டுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், வெப்ப அழற்சி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதல் உதவி அளிக்க தேவையான ஐஸ் கட்டிகள், பயிற்சி பெற்ற செவிலியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப அழற்சி நோய்களுக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu