ஆகஸ்ட் 19ம் தேதி ஈரோடு - ஹவுரா சிறப்பு ரயில்

ஆகஸ்ட் 19ம் தேதி ஈரோடு - ஹவுரா சிறப்பு ரயில்
X

பைல் படம்

Erode Special Train - போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஈரோட்டில் இருந்து ஹவுராவுக்கு ஆகஸ்ட் 19ம் தேதி ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Erode Special Trrain - போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஈரோட்டில் இருந்து ஹவுராவுக்கு ஆகஸ்ட் 19ம் தேதி ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில் எண்.06005 ஈரோடு - ஹவுரா சிறப்பு ரயில் ஈரோட்டில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஹவுராவை சென்றடையும்.

இந்த ரயில் சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சமல்கோட், விசாகப்பட்டினம், விஜயநகரம், ராயகடா, டிட்லாகர், சம்பல்பூர், ஜார்சுகுடா, ரூர்கேலா, சக்ரதர்பூர், டாடா நகர், சிராக்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

பெட்டிகளின் விபரம்:

ஏசி 3-அடுக்கு - 1, ஸ்லீப்பர் வகுப்பு - 3, பொது இரண்டாம் வகுப்பு - 14 மற்றும் லக்கேஜ்-கம்-பிரேக் வேன் - 2 பெட்டிகள். மேலே குறிப்பிட்டுள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil