Diwali Special ஈரோடு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள்!

Diwali Special ஈரோடு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள்!
X

ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை.

தீபாவளி பண்டிகைக்கு ஈரோடு மாவட்ட ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ஈரோடு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விற்பனை பிரிவின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 70,000 லிட்டர் பால் மற்றும் பால் பால் உப பொருட்கள் சுமார் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ஒன்றியத்தில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தரமான இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

நெய் மைசூர்பா அரை கிலோ பாக்கெட் ஒன்று ரூ.270-க்கும், பால்கோவா அரை கிலோ பாக்கெட் ஒன்று ரூ.250-க்கும், ஸ்பெஷல் மிக்சர் கால் கிலோ பாக்கெட் ஒன்று ரூ.100 என்ற விலைக்கு இனிப்புகள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் குறித்த விவரங்களுக்கு 888 3600 200, 888 3600 142, 855 3000 415 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் ஆவின் நிறுவனத்தின் தரமான இனிப்பு வகைகளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்கள், ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story