ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம்

கொங்கு பொறியியல் கல்லூரியின் சேவையை பாராட்டி, கல்லூரிக்கு சிறப்பு அங்கீகார விருதினை கமடோர் அதுல் குமார் ரஸ்தோகி வழங்கினார்.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில், என்சிசி பிரிவின் துப்பாக்கி சுடும் இயக்ககத்துக்கு, மாணவ மாணவியரை தேர்வு செய்வதற்கான முகாம் நடந்தது. இம்முகாமில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டிகளில், கோவை அணி முதலிடம் பிடித்தது. முகாம் நடவடிக்கைகளில் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் திறமையை அங்கீகரித்து, கேடட் வசந்தரன் கே ஒட்டுமொத்த சிறந்த கேடட் (எஸ்டி) ஆகவும், கேடட் ஷரீன் டிலைடா டி ஒட்டுமொத்த சிறந்த கேடட்டாகவும் (எஸ்டபிள்யூ) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேசிய மாணவர் படையின் துணை தலைமை இயக்குநர் கமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரியில், புதுப்பிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் தளத்தை அவர் திறந்து வைத்து, 'எஸ்எஸ்பி' தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து அவர் உரையாற்றினார். விழாவில், சமூக சேவை மற்றும் என்சிசி நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்புகளுக்காக கல்லூரியின் என்சிசி ஆர்மி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் வீ.பாலுசாமி, பதிவாளர் பி.பாலசுப்பிரமணி, கோவை குழும கமாண்டர், கர்னல் பி.வி.எஸ்.சிவராவ், கேம்ப் கமாண்டன்ட், மேஜர் சுரேஷ்குமார் மற்றும் ராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu