தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் ஈரோட்டில் சிறப்பு தொழில் கடன் மேளா
சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஈடிசியா ஹாலில் தொடங்கியது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஈடிசியா ஹாலில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தலின் படி, நடைபெற்ற இந்த விழாவிற்கு, ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார்.
ஈடிசியா தலைவர் வி.டி.ஸ்ரீதர் முன்னிலை வைத்தார். இவ்விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பாக ரூ.21.70 கோடிக்கு தொழில் முனைவோரிடமிருந்து கடன் மனுக்களை பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த தொழில் கடன் விழாவானது வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை ஈரோடு பெரியார் நகரில் உள்ள சி.எஸ்.செங்கோட்டையா காம்ப்ளக்ஸ், 2வது மாடி, 23, சிதம்பரம் காலனி, 80 அடி ரோட்டில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஈரோடு கிளையில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்ளும் புதிய தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் தொழிலகங்களுக்கு கடன் வழங்கப்படும். மேலும், தகுதியுள்ள நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மூலதன மானியம் ரூ 1.50 கோடி வரை பெற்று தரப்படும்.
இந்த முகாமில் கலந்து கொண்டு கடன் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு பரிசீலனை கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். மேலும், தகவலுக்கு 0424 2262080, 94443 96849, 94443 96814 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கிளை மேலாளர் எஸ்.சுஷ்மிதா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu