ஈரோட்டில் 26ம் தேதி தனியார் நிறுவனத்துக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் 26ம் தேதி தனியார் நிறுவனத்துக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்
X

வேலைவாய்ப்பு கண்காட்சி (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிரபல தனியார் நிறுவனத்துக்கான பிரத்யேக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிரபல தனியார் நிறுவனத்துக்கான பிரத்யேக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (22ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிரபல தனியார் நிறுவனத்துக்கான பிரத்யேக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பிரபல தனியார் நிறுவனத்தின் வேலையளிப்போர் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 4000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இதற்கான பணிக்காலியிடங்களின் விவரங்கள் பின்வருமாறு: பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு Home Sales Officer, Channel Sales Lead, Assistant Manager, Manager, Enterprise Sales Officer, Digital Repair Specialist, Fibre Engineer உள்ளிட்ட பணியிடங்களுக்கும், ITI மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு Fibre Associate, Fibre Engineer, Digital Repair Specialist உள்ளிட்ட பணிக்காலியிடங்களும், 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Air Fiber Freelancer Technician பணிக்காலியிடமும் நிரப்பப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது

இம்முகாமிற்கு வருகைபுரியும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ, 8675412356, 9499055942 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!