ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
X

சமூக நீதி நாள் உறுதிமொழியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று (16ம் தேதி) ஏற்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அறிவுச்சுடரை போற்றும் விதமாக ஆண்டுதோறும் சமூக நீதி நாள் ஆக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற விதி 110ன் கீழ் அறிவித்தார்.


அதன்படி, தந்தை பெரியார் பிறந்த நாள் நாளை (17ம் தேதி) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று (16ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி சமூக நீதி நாள் உறுதி மொழியை வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா (பொது), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
future of ai in retail