ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.1.49 கோடி ரொக்கம் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.1.49 கோடி ரொக்கம் பறிமுதல்
X

தேர்தல் பறக்கும் படை வாகனம்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.49 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.49 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ல் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்பவா்கள், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் பரிசுப் பொருள்களைக் கொண்டு செல்பவா்களைக் கண்காணித்து பணம், பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா்.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (23ம் தேதி) வரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரூ.35 லட்சத்து 9 ஆயிரத்து 547 ரூபாயும், ஈரோடு மேற்குத் தொகுதி ரூ.36 லட்சத்து 27 ஆயிரத்து 260 ரூபாயும், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 170 ரூபாயும், பெருந்துறை ரூ.13 லட்சத்து 29 ஆயிரத்து 480 ரூபாயும், பவானி தொகுதியில் ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 650 ரூபாயும், அந்தியூர் தொகுதியில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 750 ரூபாயும், கோபி தொகுதியில் ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 150 ரூபாயும், பவானிசாகர் தொகுதியில் ரூ.45 லட்சத்து 64 ஆயிரத்து 238 ரூபாயும் என மொத்தம் ரூ.1 கோடியே 49 லட்சத்து 43 ஆயிரத்து 245 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 18 ஆயிரத்து 535 உரிய நபர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.72 லட்சத்து 24 ஆயிரத்து 710 ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக தொகை கொண்டு வந்த நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்