கோபி நகராட்சியில் இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை‌

கோபி நகராட்சியில் இன்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை‌
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சி உட்பட 10 பேரூராட்களில் இன்று ஒருவர் கூட வேட்புமனு அளிக்கவில்லை.

தமிழகத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி, கூகலூர், காசிபாளையம், லக்கம்பட்டி, சலங்கபாளையம், பி.மேட்டுப்பாளையம், வாணிப்புத்தூர், நம்பியூர், பெரிய கொடிவேரி, கொளப்பலூர், ஏலத்தூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களில் வேட்பாளர்கள் வேட்புமனு அளிக்க வருவார்கள் என்பதால், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் தேர்தல் அலுவலர்கள் இருந்தனர். ஆனால், இன்று ஒருவர் கூட வேட்புமனு அளிக்கவில்லை. இதனால், வெறிச்சோடி காணப்பட்டது. நகராட்சி அலுவலகங்கள் முன்பு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!