/* */

மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

Protest News -மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
X
மொடக்குறிச்சியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Protest News -மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தலைமை நீதிமன்றம், மகிளா நீதிமன்றம் உள்ளது. அதேபோல், மாவட்டத்தில் கோபி, சத்தி, பவானி , பெருந்துறை உள்ளிட்ட இடங்களிலும் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி மொடக்குறிச்சியில் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. அதற்கான இடத்தை மொடக்குறிச்சி தாசில்தார் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அதனை மாற்றி மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள எழுமாத்தூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க வருவாய் துறையினர் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டு பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து, மொடக்குறிச்சி அனைத்து வணிகர்கள் சார்பில், கருத்துக் கேட்புக் கூட்டம் கிராம கமிட்டி தலைவர் கொழந்தசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில், அரசு ஆணைப்படி மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும், மொடக்குறிச்சியில் தற்காலிக நீதிமன்றத்திற்கான இடம் இருந்தும் அதனை அரசுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் மொடக்குறிச்சி தாசில்தாரைக் கண்டித்து மொடக்குறிச்சியில் 7-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதேபோல், மொடக்குறிச்சி நால்ரோட்டில் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்று மொடக்குறிச்சி தாலுக்கா அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (7-ம் தேதி) மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கடைகள் வணிகர் சங்கத்தின் சார்பில், காலை 6 மணி முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மொடக்குறிச்சியில் அனைத்து அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் என அனைத்து துறைகளும் உள்ள நிலையில் தமிழக அரசாணைப்படி, மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைய வருவாய் வட்டாட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது மொடக்குறிச்சியில் தற்காலிக நீதிமன்றம் அமைக்க அனைத்து வசதிகளுடன் கூடிய பேரூராட்சி கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. அதனை நீதிதுறைக்கு பரிந்துறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதைக்கண்டித்து மொடக்குறிச்சி வணிகர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியினர் சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கடையடைப்பு போராட்டமானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நிலையில், மொடக்குறிச்சி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  6. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  7. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  9. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  10. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...