கோபி அருகே தம்பி மகளுக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா உட்பட இருவர் கைது

கோபி அருகே தம்பி மகளுக்கு பாலியல் தொல்லை: பெரியப்பா உட்பட இருவர் கைது
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அருகே தம்பியின் 13 வயது மகளை 3 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் பெரியப்பா உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 27ம் தேதி அதே பகுதியில் உள்ள கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த வாசுதேவன், சிவக்குமார், மோகன் ஆகியோர் சிறுமியை கடத்திச்சென்று, சிவக்குமார் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பின்னர் இதை வெளியில் கொலை செய்து கூறினால் விடுவதாக மிரட்டி சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறுமி பயந்துபோய் இதுபற்றி பெற்றோரிடம் கூறவில்லை. இந்நிலையில், இரண்டு நாட்களாக சிறுமி சோர்வடைந்த நிலையில் இருப்பதை பார்த்து அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, வாசுதேவன், சிவக்குமார், மோகன் ஆகியோர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும், சிறுமியின் பெரியப்பா (சிறுமியின் தந்தையின் அண்ணன்) பச்சையப்பன் என்கிற குணசேகரன் (52) என்பவரும் கடந்த 3 மாத காலமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சிறுமியின் பெரியப்பா குணசேகரன், வாசுதேவன் ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சிவக்குமார், மோகன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!