சத்தியில் உலக பாம்புகள் தினத்தையொட்டி கருத்தரங்கு..!
சத்தியமங்கலத்தில் உலக பாம்புகள் தினத்தையொட்டி பாம்புகளின் வாழ்விட சிக்கல்கள் குறித்த கருந்தரங்கு நடைபெற்றது.
உலக பாம்புகள் தினத்தையொட்டி காலநிலை மாற்றமும், பாம்புகளின் வாழ்விட சிக்கல்களும் எனும் தலைப்பில் கருத்தரங்கத்தை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், சுடர் அமைப்பும் இணைந்து நடத்தின.
கல்லூரியின் முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், சூழலியலாளர் கோவை சதாசிவம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, நகரமயமாதலின் விளைவாக பாம்புகளின் வாழ்விடம் பெருமளவுக்கு சுருங்கி வருகிறது. அதுபோல, வேளாண் நிலங்களில் கூட பாம்புகள் வாழும் சூழல் இல்லை.
பாம்புகளுக்கான உணவுகள் பற்றாக்குறையும் கூட பாம்புகளின் வாழ்க்கைக்கு பெரிய நெருக்கடியை சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றன. அதேபோல பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகள் மக்களுக்கு காலம் காலமாய் படிந்திருக்கிற பாம்பு குறித்து அச்சமும் மூடநம்பிக்கையும் பாம்புகளின் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக உள்ளது. பாம்புகளைப் பற்றி இந்த உலக பாம்புகள் தினத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பாம்புகள் குறித்த அச்சம் நமக்கு தேவையில்லை. பாம்புகளோடு எப்படி இருப்பது பாம்பு கடிதத்திலிருந்து நாம் எப்படி வாழ்வது என்பதெல்லாம் புதிய தலைமுறை உணர வேண்டும். மீதம் இருக்கிற பாம்புகளை நாம் காப்பாற்ற வேண்டும் என்பதே நம் முன்னால் உள்ள கடமை என்பதே நம் முன்னால் உள்ள கடமை. வேளாண் மக்களுக்கு மண்புழு மட்டுமல்ல நண்பன், பாம்புகள் கூட நண்பன் தான். அவர்களின் விளைச்சலை பாதுகாத்து தருவதில் பாம்புகளுக்கும் பங்குண்டு.
எலிகள் பெருகினால் எப்படி வயல்வெளிகளில் எலிகள் தின்றது போக அதிகளவு தானியங்களை விரயம் செய்கிறது. அதிகளவு தானியங்களை விரயம் செய்கிறது. ஆகவே எலிகளை கட்டுப்படுத்த வயல்வெளிகளில் பாம்புகளும் இருக்க வேண்டும் வயல்வெளிகளில் பாம்புகளும் இருக்க வேண்டும். பல்லுயிர் சூழலை பாதுகாப்பது என்பது வயல்வெளிகளில் உயிர்களை பாதுகாப்பதாகும்.
நம்மிடத்திலே இந்தியாவில் 300 வகை பாம்புகள் இருப்பதை நாம் அறிவோம் அதிலே 54 வகை பாம்புகள் விஷப்பாம்புகள் என்றாலும் கூட கடலில் தான் அதிகமான விஷ பாம்புகள் இருக்கிறது. மக்களின் வாழ்விடங்களில் மக்கள் புழங்குகிற, மக்களுக்கு நெருக்கமாக நான்கு வகையான விஷ பாம்புகள் இருக்கிறது. ஒன்று சுருட்டை விரியன்,கட்டு விரியன், கண்ணாடி விரியன், நாக பாம்பு என்ற இந்த நான்கு வகை பாம்புகளை மனிதர்கள் மிக நேர்த்தியாக கையாளலாம்.
இவைகளின் தாக்குதலிலிருந்து, நாமும் தப்பித்து, நம்மிடத்தில் இருந்து அதையும் தப்பிக்கிற நிறைய வழிமுறைகள் உள்ளன. அதை கையாண்டு இந்த பாம்புகளை காப்பாற்றுவது என்பது நம்மைச் சுற்றி இருக்கிற பல்வேறு பல்லுயிர் பெருக்கத்தை காப்பதாகும். இந்த காலநிலை மாற்றத்தில் பூமி அதிகமாக சூடாகிற போது ஏதாவது இடுக்கில் உள்ள பாம்புகள், இரவில் மட்டுமே நடமாடி வந்த இப்பாம்புகள் இப்போது பகலிலும் நிறைய தென்பட தொடங்கி இருப்பது தான் கால நிலை மாற்றத்தின் விளைவாகும்.
பகலிலே பாம்புகளை பார்க்கிற மக்கள் அதை அடித்துக் கொன்று விடுகிறார். இப்படி தொடர்ந்து பகலிலே பார்க்கிற பாம்புகளை அடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். காலநிலை மாற்றம் என்பது பாம்புகளை கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே பாம்புகளை, அடித்துக் கொள்ளாமல் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் வளர்ந்த சமூகத்தினுடைய பண்பாக இருக்க வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில், வணிகவியல் துறை பேராசிரியர் பொங்கியண்ணன், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதில், கல்லூரி மாணவ மாணவியர் திரளாக பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu