ஈரோட்டில் 'நம்ம ஈரோடை' செல்பி பாயிண்டை திறந்து வைத்த மேயர்..!

ஈரோட்டில் நம்ம ஈரோடை செல்பி பாயிண்டை திறந்து வைத்த மேயர்..!
X

நம்ம ஈரோடை செல்பி பாயிண்ட்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட நம்ம ஈரோடை என்ற செல்பி பாயிண்டை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட நம்ம ஈரோடை என்ற செல்பி பாயிண்டை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்பி பாயிண்ட் வைரலாகி வருகின்றது. குறிப்பாக சென்னை, கோவை நாமக்கல், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் காணப்பட்டாலும் இதுவரை ஈரோட்டுக்கு என்று ஒரு செல்பி பாயிண்ட் இல்லை என்ற குறை இருந்தது. இந்தக் குறையை போக்கும் வகையில் ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஈரோட்டுக்கு என்று செல்பி பாயிண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனையடுத்து, நம்ம ஈரோடை என்ற பெயர் கொண்ட செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடந்தது. இதில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு செல்பி பாயிண்டை திறந்து வைத்து செல்பி எடுத்து கொண்டார்.

இவ்விழாவில், பாயிண்ட்டை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மனீஷ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி 1ம் மண்டல தலைவர் பழனிச்சாமி, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர் புவனேஸ்வரி பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
வனத்துறையின் மலையேற்ற இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?
மீண்டும் கொடிய நோயாக மாறும் காசநோய், கொரோனாவை விட அதிகமான இறப்புகள்
2047 க்குள் ஆண்டுக்கு 17 லட்சம் கோடி சைபர் தாக்குதல்கள் நடக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
பீகாரில்  லட்சக்கணக்கில் விற்கப்படும் குப்பைகள்: அப்படி என்ன குப்பை தெரியுமா?
ஈரோட்டில் நம்ம ஈரோடை செல்பி பாயிண்டை திறந்து வைத்த மேயர்..!
ஈரோடு, கோபி, பவானி தபால் நிலையங்களில் கங்கை புனிதநீர் விற்பனை
தாளவாடி போலீசாரால் கைது செய்யப்பட்ட விவசாய சங்கத் தலைவர் விடுதலை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு
ஈரோடு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு
சாலையோர கடைகளால் ஈரோடு கனி மார்க்கெட் வளாக வியாபாரிகளின் வர்த்தகம் பாதிப்பு
தாளவாடி பகுதி சுகாதார நிலையங்களில் 16 மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றால் இல்லற வாழ்க்கையே பாதிக்கலாம்..! சிகிச்சை அவசியம்..!