டி.என்.பாளையத்தில் பவானிக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

டி.என்.பாளையத்தில் பவானிக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

டி.என்.பாளையத்தில் இருந்து பவானிக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இளைஞரை கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாப்புதூர் நால்ரோடு பகுதியில் இருந்து பவானிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார் சத்தி கோபி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சத்தி சாலையில் இருந்து பவானி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்றை பங்களாப்புதூர் மூன்று ரோடு சந்திப்பில் நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் வேனில் சுமார் 2 டன் எடையுள்ள ரேசன் அரிசி 50 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ரேசன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார், பங்களாப்புதூர் சென்று வேன் ஓட்டுநர் திருப்பூர் மாவட்டம் ரங்கநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுரேஸ் மகன் சரணிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் டி.என்.பாளையம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் இருந்து வாங்கிக்கொண்டு பவானியில் உள்ள ராஜேஸ் என்பவருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார், வேன் ஓட்டுநர் சரணை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்