ஈரோட்டில் நாளை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

ஈரோட்டில் நாளை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

பைல் படம்.

ஈரோடு மாவட்ட பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு ஈரோட்டில் நாளை (புதன்கிழமை) நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு ஈரோட்டில் நாளை (புதன்கிழமை) நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 2 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளை (14ம் தேதி ) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரியில் பிற்பகல் 1 மணிக்கு மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்துகொண்டு பேசுகிறார். மாநாட்டில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்கிறார்கள்.

Tags

Next Story