ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு விழா..!

ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு விழா..!
X

ஈரோடு, நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர்.சி.என்.ராஜா வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் முதல்வர் சண்முகசுந்தரி ஆண்டறிக்கை வாசித்தார்கள். பள்ளியின் செயலாளர் நந்தி சி.மோகன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக கழக கூட்டமைப்பின் மாநில ஆலோசகர் ஜெகதீசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பெற்றோர்கள் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் அலைபேசியில் காட்டும் ஆர்வத்தை தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கும், பல்வேறு பாடப் பிரிவுகளில் முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு, அனைத்து ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில், பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில், பள்ளியின் துணை முதல்வர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!