சத்தியமங்கலம் பேருந்து நிலைய கழிப்பறை பயன்படுத்தினால், நோய் இலவசம்..! வாங்கம்மா வாங்க..!

சத்தியமங்கலம்  பேருந்து நிலைய கழிப்பறை பயன்படுத்தினால், நோய் இலவசம்..! வாங்கம்மா வாங்க..!
X
சத்தியமங்கலம் பேருந்து நிலைய கழிப்பறை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை முறையான பராமரிப்பு இன்றி உள்ளதால், நோய் தொற்று மையமாக மாறியுள்ளது.

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை முறையான பராமரிப்பு இன்றி உள்ளதால், நோய் தொற்று மையமாக மாறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் இருந்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு சத்தியமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஆண், பெண் பயணிகளுக்கான இலவச கழிப்பறைகள் சிதிலமடைந்தும் காணப்படுகிறது .

மேலும், கழிப்பறையில் சேகரமாகும் கழிவுநீர் வெளியேறவும் வழியின்றி கோபி பேருந்துகள் நிற்கும் கிழக்கு பகுதியில் குளம் போல தேங்கி ஆங்காங்கே கொசுக்களை உற்பத்தி செய்து பெரும் நோய் தொற்று மையமாக மாறி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், ஆன்மீக அன்பர்களும் சத்தி நகராட்சி சுகாதார அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் இதுவரை தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றிட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நகராட்சி பேருந்து நிலையம் முழுவதும் போர்கால அடிப்படையில் சுகாதார பணிகளை மேற்கொண்டு வெளியூரிலிருந்து வந்து செல்லும் பயணிகளுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!