அந்தியூரில் சரத்குமார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சின்னதம்பிபாளையம் ஊராட்சியில், ஈரோடு வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் 68-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் ஒன்றிய துணைச்செயலாளர் தங்கராசு தலைமையில், மாவட்ட செயலாளர் எம்.குருநாதன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலையில், சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், அந்தியூர் அரசு மருத்துவமனை, அந்தியூர் காவல் நிலையம், அந்தியூர் வட்டார போக்குவரத்து காவல் நிலையம், அந்தியூர் நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அந்தியூர் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பின்னர், ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் சிவக்குமார்,மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குமார், ஒன்றிய துணை செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய பிரதிநிதிகள் சந்துரு, அம்மாபேட்டை ஒன்றிய பிரதிநிதி மணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu