ஈரோட்டில் பெண் தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல்; எஸ்பி அலுவலகத்தில் புகார்!

ஈரோட்டில் பெண் தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல்; எஸ்பி அலுவலகத்தில் புகார்!
X
ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சாதித் தலைமையில் புகார் மனு அளித்த தமிழரசி.
ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் எடுக்க கோரி, எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் எடுக்க கோரி, எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி 35வது வார்டில் பார்வதி ராஜேந்திரன் என்பவர் நிரந்தர தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் உதவியாக அவரது மகளாகிய தமிழரசி அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். நான்கு சக்கர வாகனங்களில் வீட்டு குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை செய்து வருகிறார். தற்சமயம் 35வது வார்டில் வாட்ஸ் அப் குழு உருவாக்கி அதில் பணி சார்ந்த தகவல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த குழுவில் அதிகாரிகள் மற்றும் வார்டில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் இணைக்கப்பட்டு உள்ளனர். இந்த பொது தளத்தில் 35வது வார்டு சுய உதவிக் குழு தூய்மை பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் மாதேஸ்வான் மற்றும் சுய உதவிக் குழு வாகனப்பிரிவு மேற்பார்வையாளர் யுவராஜ் என்பவரும் தமிழரசி மற்றும் அவருடன் பணிபுரிந்து வரும் பெண்களையும் தகாத வார்த்தைகளால் பேசி பொதுத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரை அணுகி இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசி முறையிட்டுள்ளார்.

இதை அறிந்து வார்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது மாதேஸ்வான் என்பவர் என்னிடம் வந்து உனக்கு அவ்வளவு திமிரா என் மேல கமிஷனர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ற அளவுக்கு நீ பெரிய ஆளா குடும்பத்தோட உங்களை வெட்டி போட்டு விடுவேன் கேட்க ஆள் இல்லாத உன்னை பார்த்துக்கிறேன் என்று கொலை மிரட்டல் விடுத்து தொடர்ந்து சமூகத்தையும் இழிவு படுத்தி உள்ளார்.

இதனால், மனவேதனை அடைந்த தமிழரசி இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஷாதிக் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். உடன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அக்பர் அலி, பால்ராஜ், ரஞ்சித், ஆனந்தன், அப்சர், இளையராஜா, கதிரவன், கார்த்திக், அப்பாஸ், சண்முகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்