கோபி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

கோபி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

Erode news- மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Erode news, Erode news today- கோபி அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் ஏழூர் மேடு பிரிவில் பங்களாப்புதூர் போலீசார், அரக்கன்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று (9ம் தேதி) வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக பதிவெண் இல்லாமல் வந்த டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிராக்டரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் டிராக்டரையும் சோதனையிட்டனர்.

சோதனையின்போது டிராக்டரில் ஒரு யூனிட் மணல் இருந்ததை போலீசார் கண்டனர். இதைத்தொடர்ந்து பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் அரக்கன் கோட்டை ஏழூர் கருப்பணகவுண்டர் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 54) என்பதும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து மணலை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வெள்ளியங்கிரியை போலீசார் கைது செய்ததுடன், மணல் கடத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story