ஈரோட்டில் நாளை கூடுகிறது சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை கூடுகிறது சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
X
ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் உள்ளார். அக்கட்சியின் விதிப்படி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பொதுக்குழு கூடி பொதுக்குழு உறுப்பினர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான 7-வது பொதுக்குழு கூட்டம் ஈரோடு ஆர்.என்.புதூர் அருகே உள்ள பிளாட்டினம் மஹாலில் நாளை (மார்ச்.19) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று (சனிக்கிழமை) சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.

பின்பு அவர் அங்கிருந்து கார் மூலம், ஈரோடு மாவட்டம் பவானி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்குகிறார் பின்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஈரோடு பவானி ரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் கூட்டம் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் உட்பட 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சரத்குமாரை ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மாநில துணை பொதுச்செயலாளர்கள் ஈஸ்வரன் மகாலிங்கம், பொருளாளர் சுந்தரேசன் ,கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் அரசியல் ஆலோசகர் லாரன்ஸ், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங்குளம் கணேசன் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் சின்னசாமி, குருநாதன் உள்பட பலர் கலந்து பங்கேற்க உள்ளனர். தற்போது, இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 18 March 2023 1:15 PM GMT

Related News

Latest News

 1. சிங்காநல்லூர்
  ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்...
 2. கலசப்பாக்கம்
  ஜவ்வாது மலையில் புதிய கட்டிடங்கள் திறப்பு
 3. நாமக்கல்
  நாமக்கல் பகுதியில் 5 வழித்தடங்களில் பஸ் வசதி; துவக்கி வைத்த அமைச்சர்
 4. கோவை மாநகர்
  மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சித்து வருகிறார் :...
 5. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 6. திருவண்ணாமலை
  நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
 7. தமிழ்நாடு
  98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! அமைச்சர் தகவல்
 8. திருவண்ணாமலை
  சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் சேர்ப்பு
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி
 10. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து...