இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பாமக சார்பில் வீரவணக்கம்

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பாமக சார்பில் வீரவணக்கம்
X

கோபியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு கோபியில் பாமக சார்பில் இன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Erode Today News - இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு கோபியில் பாமக சார்பில் இன்று (17ம் தேதி) வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

ஈரோடு மேற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 1987ம் ஆண்டு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே இன்று (17ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் லிங்கேஷ், முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் ரவிசேகர், நகர தலைவர் மாதேஷ், ஒன்றிய தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் லட்சுமணன், டாக்டர்.கோபிநாத், கணேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு 1987ம் ஆண்டு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் முழக்கங்களை எழுப்பியும் வீரவணக்கம் செலுத்தினர்.

Tags

Next Story
future of ai in retail