ஈரோடு, கோபி, பவானி தபால் நிலையங்களில் கங்கை புனிதநீர் விற்பனை

ஈரோடு, கோபி, பவானி தபால் நிலையங்களில் கங்கை புனிதநீர் விற்பனை
X

கங்கை புனிதநீர்.

ஈரோடு, கோபி, பவானி தபால் நிலையங்களில் கங்கை புனிதநீர் 250 மி.லி. ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோடு, கோபி, பவானி தபால் நிலையங்களில் கங்கை புனிதநீர் 250 மி.லி. ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அஞ்சல் துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, தபால் அனுப்புவது மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவது, ஆதார் சேவையும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தபால் நிலையங்களில் பணம் செலுத்தினால். கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம் மற்றும் சபரிமலை பிரசாதம் போன்றவை வீடு தேடி வருகிறது. இதேபோல் கங்கை புனிதநீர் விற்பனையும் தபால் நிலையங்களில் நடக்கிறது.

ஈரோடு, கோபி, பவானி கிளைகளில் கங்கை புனிதநீர் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பொதுமக்கள் அங்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். ரூ.30 செலுத்தினால் 250 மி.லி. வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஈரோடு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபால் கூறுகையில், கங்கை நீர் தேவைப்படுபவர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்கு சென்று பணம் செலுத்தி வாங்கிச் செல்லலாம்.

கோவில் கும்பாபிஷேகம், அமாவாசை. உள்ளூர் திருவிழா போன்ற காலங்களில் கங்கை புனிதநீர் விற்பனை ஆகிறது. இதுவரை ஏராளமானோர் கங்கை புனிதநீரை வாங்கிச் சென்றுள்னர். இந்த சேவை தபால் நிலையங்களில் தொடர்ந்து இருக்கும் என்றார்.

Tags

Next Story