சலங்கபாளையம் 9வது வார்டு கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகி அதிமுகவில் இணைவு
கே.சி.கருப்பண்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 9-வது வார்டு கவுன்சிலர் நாச்சாள்.
ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி 9-வது வார்டு கவுன்சிலராக சென்னி என்பவரது மனைவி திருமதி.நாச்சாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது வார்டுக்கு உட்பட்ட அய்யங்காடு பகுதியில் இரண்டு தார் சாலைகள், கிருஷ்ணாபுரம் காலனியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி, 4 வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தருமாறு பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால், 9-வது வார்டு கவுன்சிலர் நாச்சாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், தற்போதைய பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் முன்னிலை அதிமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து கவுன்சிலர் நாச்சாள் கூறும்போது, கடந்த ஒரு வருடமாக 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எவ்வித வளர்ச்சி திட்ட பணியும் நடைபெறாத நிலையில், பல முறை கூறியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனாலேயே, அதிமுகவில் இணைந்ததாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu