ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில் கிராமப்புற மேம்பாட்டு முகாம்

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில் கிராமப்புற மேம்பாட்டு முகாம்
X

கிராமப் புற மேம்பாட்டு முகாம் தொடக்க விழாவில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வாசுதேவன் பேசினார்.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில் கிராமப் புற மேம்பாட்டு முகாம் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில் கிராமப் புற மேம்பாட்டு முகாம் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில் வளர்ச்சி விழி என்ற அடிப்படையில் கிராமப்புற நல மேம்பாட்டு முகாம் ஈரோடு நஞ்சனாபுரத்தில் தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.


நஞ்சனாபுரம் கிராமத்தில் இதன் தொடக்க விழாவில் சமுகப்பணித்துறை தலைவர் என்.பூந்தமிழன் கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் எச்.வாசுதேவன் கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் கதிரம்பட்டி ஊராட்சித் தலைவர் விசாலாட்சி மகாலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.


இவ்விழாவில், நஞ்சனாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானாம்பாள், கதிரம்பட்டி ஊராட்சி துணை தலைவர் தமிழரசி பாலு, நஞ்சனாபுரம் கிராம நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் திருமூர்த்தி, முன்னாள் சுப்ரீம் லயன்ஸ் கவர்னர் ரவிச்சந்திரன், ஊர் பொதுமக்கள், சமூகப் பணித்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


இம்முகாமில் சமூகப் பணித்துறை மாணவ மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மருத்துவ முகாம்களை நஞ்சனாபுரம் பகுதி வாழும் மக்களின் நலனுக்காக நடத்த உள்ளனர். முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்த சமூக பணித்துறையினரை கல்லூரியில் தாளாளர் பி.டி.தங்கவேல் வாழ்த்தினார்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்