ஈரோட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

Erode news- நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சாலை பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
Erode news, Erode news today- ஈரோட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டி, விளம்பரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் முதற்கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், பரிசீலனை மார்ச் 28ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறுதல் மார்ச் 30ம் தேதியும், வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த 7,40,298 ஆண் வாக்காளர்களும், 7,87,762 பெண் வாக்காளர்களும்,181 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் ஈரோட்டில் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தலைவர்களின் சிலை கொடி கம்பங்கள் ஆகியவற்றை மறைக்கும் பணிகளை முதல் கட்டமாக மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu