ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள்

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள்
X

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட ரூ.11.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பட்டியல் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் வழங்கப்பட்டது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். அவ்வகையில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரூ.11.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருட்களை சரக்கு வாகனத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தலைவர் ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன, பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


முன்னதாக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரூ.11.50 ரூபாய் மதிப்பில் அனுப்பப்பட்ட பொருட்களின் விவரம் குறித்த பட்டியலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் ஆகியோர் வழங்கினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!