/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.28 கோடி பொருட்கள் பறிமுதல்

Erode news- ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை 4 கோடியே 28 லட்சத்து 15 ஆயிரத்து 720 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.4.28 கோடி பொருட்கள் பறிமுதல்
X

Erode news- தேர்தல் பறக்கும் படை குழு.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை வரை 4 கோடியே 28 லட்சத்து 15 ஆயிரத்து 720 ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று (ஏப்ரல் 4) வியாழக்கிழமை காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.75 லட்சத்து 11 ஆயிரத்து 607ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.84 லட்சத்து 19 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670ம், பெருந்துறை தொகுதியில் ரூ.26 லட்சத்து 69 ஆயிரத்து 810ம், பவானி தொகுதியில் ரூ.20 லட்சத்து 94 ஆயிரத்து 300ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850ம் பறிமுதல் செய்ய்துள்ளனர்.

இதேபோல், கோபி தொகுதியில் ரூ.27 லட்சத்து 22 ஆயிரத்து 130ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.73 லட்சத்து 62 ஆயிரத்து 236ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 200 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.3 கோடியே 20 லட்சத்து 47 ஆயிரத்து 493 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 68 ஆயிரத்து 227 ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், ரொக்கப் பணம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 17 ஆயிரத்து 645 ரூபாயை உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள ரூ.1 கோடியே 21 லட்சத்து 29 ஆயிரத்து 848 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Updated On: 4 April 2024 6:45 AM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
 2. இந்தியா
  சபாஷ் தேர்தல் ஆணையம்...!
 3. இந்தியா
  இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
 4. தமிழ்நாடு
  ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
 5. கோவை மாநகர்
  கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
 6. லைஃப்ஸ்டைல்
  சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
 7. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 8. நாமக்கல்
  தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
 9. நாமக்கல்
  நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
 10. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்