ரூ.2.57 கோடி மோசடி: ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஷூ ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் புகார்
ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த ஷூ ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஞானபால்.
ரூ.2.57 கோடியை ஊழியர்கள் உட்பட 7 பேர் மோசடி செய்து விட்டதாக, ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஷூ ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் புகார் மனு அளித்துள்ளார்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபால் (வயது 60). இவர் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (17ம் தேதி) இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தோல் பதனிடும் ஆலை மற்றும் வெளிநாடுகளுக்கு ஷூ ஏற்றுமதி செய்யும் தொழிலை ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு 35 வருடங்களாக செய்து வருகிறார்.
இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலை விரிவுபடுத்துமை வகையில் ராணிப்பேட்டையில் ஷூ ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கி பரமகுரு, முருகன், கோபி, ஜமுனா, தணிகைவேல் உள்ளிட்ட நபர்களின் மேற்பார்வையில் தொழிலை செய்து வந்தேன்.
கடந்த 2020ல் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு, 2021ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், ராணிப்பேட்டைக்கு சென்று தொழிலை கவனிக்க முடியவில்லை. இதனால், நிறுவனத்தில் பணியாற்றிய பரமகுரு, கோபி, ஜமுனா மற்றும் தணிகைவேல் ஆகியோர் நிர்வகித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது தன்னுடைய அனுமதி இல்லாமல் வேறு ஒருவர் பெயரில் வெளிநாடுகளுக்கு ஷூ ஏற்றுமதி செய்து கொண்டு இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த நிலையில், ஏற்றுமதி செய்த ஷூ குறித்த கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 கோடியே 57 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
எனவே, என்னை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீர், மகாலட்சுமி மற்றும் முருகேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu