அந்தியூரில் தூய்மை பணியாளர் வீட்டில் ரூ.1.10 லட்சம் பணம், நகை திருட்டு

அந்தியூரில் தூய்மை பணியாளர் வீட்டில் ரூ.1.10 லட்சம் பணம், நகை திருட்டு
X

நகை - பணம் திருட்டு (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தூய்மை பணியாளர் வீட்டில் ரூ.1.10 லட்சம் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தியூரில் தூய்மை பணியாளர் வீட்டில் ரூ.1.10 லட்சம் பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஸ்வீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 55). பேரூராட்சி தூய்மை பணியாளர். இவருடைய கணவர் சந்திரன். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 22ம் தேதி மதியம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் பிரேஸ்லெட் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்