ஈரோட்டில் டாக்டர் வீடு கொள்ளை: மேலும் ஒருவர் கைது; 66.5 பவுன் நகை மீட்பு

ஈரோட்டில் டாக்டர் வீடு கொள்ளை: மேலும் ஒருவர் கைது; 66.5 பவுன் நகை மீட்பு
X

கைது செய்யப்பட்ட நரி (எ) நரேந்திரன்.

ஈரோட்டில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 66.50 பவுன் நகைகளை மீட்டனர்.

ஈரோட்டில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 66.50 பவுன் நகைகளை மீட்டனர்.

ஈரோடு சம்பத் நகர் அருகே உள்ள சஞ்சய் நகர் ராணி வீதியை சேர்ந்தவர் பிரபாத். மனைவி ராணி சுப்ரியா (வயது 42). ஹோமியோபதி டாக்டர். கடந்த 30ம் தேதி இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 219 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 25 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் தனிப்படை அமைத்து, கடந்த 12ம் தேதி சென்னை ஆவடி, சுரக்காபாளையம் பகுதி அகில் குமார் (எ) வெள்ளை (வயது 21), சென்னை திருமுல்லைவாயில், தென்றல் நகர் சஞ்சய் (எ) தனசேகர் (வயது 19) ஆகிய இருவரையும் கரூரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 பவுன் நகை, ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இக்கொள்ளையில் தொடர்புடைய சென்னை அம்பத்தூர் பானுனா நகர் புதூரைச் சேர்ந்த நரி (எ) நரேந்திரன் (21) என்பவரை திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் நேற்று (19ம் தேதி) கைது செய்தனர். அவரிடம் இருந்து, 66.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!