ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் இதோ!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் இதோ!
X
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 36 பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 36 பேரூராட்சிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளன.அதன் விவரம் பின்வருமாறு:-

அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் திமுக 15 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

சிவகிரி 18 வார்டுகளில் திமுக 11 வார்டுகளை கைப்பற்றியது.

அத்தாணி 15 வார்டுகளில் திமுக 10 இடங்களை கைப்பற்றியது.

நெரிஞ்சிப்பேட்டை 15 வார்டுகளில் திமுக 7 , அதிமுக 7 மற்றும் சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னசமுத்திரம் 15 வார்டுகளில் திமுக 10 இடங்களை கைப்பற்றியது.

மொடக்குறிச்சி 15 வார்டுகளில் 10 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

ஒலகடம் 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி.

ஜம்பை 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

எலத்தூர் 15 வார்டுகளில் திமுக 9 இடங்களில் வெற்றி.

நசியனூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 13 இடங்களில் வெற்றி.

நம்பியூர் 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

வடுகப்பட்டி 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

கொடுமுடி 15 வார்டுகளில் 11 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

பள்ளப்பாளையம் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக வெற்றி.

கூகலூர் 15 வார்டுகளில் 13 வார்டுகளில் திமுக அமோக வெற்றி பெற்றது.

அறச்சலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 11 வார்டுகளில் வெற்றி.

பாசூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் 8 வார்டுகளை திமுகவும் , காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன.

பெரிய கொடிவேரி 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்தன.

லக்கம்பட்டி பேரூராட்சியில் அதிமுக 12 இடங்களையும் திமுக 3 இடங்களையும் பிடித்தன.

அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது.

பவானிசாகர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 13 இந்திய கம்யூனிஸ்டு ஒரு வார்டையும் கைப்பற்றின.

கருமாண்டிசெல்லிபாளையம் பாளையத்தில் 18 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது.

பெருந்துறை 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது.

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 7 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

அவல்பூந்துறை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

கொம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9 வார்டுகளை திமுக வெற்றி பெற்றுள்ளது.

சலங்கபாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

சித்தோடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றியது.

கிளாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுகவும் , காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

சென்னிமலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 13 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

காஞ்சிக்கோவில் 15 வார்டுகளில் திமுக 11 வார்டுகளை கைப்பற்றியது.

காசிபாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளை கைப்பற்றியது.

கொளப்பலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

நல்லாம்பட்டி பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் திமுக 5 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும் , 4 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளன.

பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 5 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அதிமுக மற்றும் பாஜக தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

வெங்கம்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 5 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 வார்டுகளிலும், பிஜேபி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஊஞ்சலூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளில் வெற்றி.

அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 9 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

கொல்லான்கோவில் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 13 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!