ஈரோட்டை குளிர்வித்த திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டை குளிர்வித்த திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மழையின் போது எடுத்த படம் இடம்:- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகம்.

ஈரோட்டில் இன்று (மே.13) திங்கட்கிழமை மாலையில் திடீரென பலத்த காற்றோடு பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோட்டில் இன்று (மே.13) திங்கட்கிழமை மாலையில் திடீரென பலத்த காற்றோடு பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோட்டில் சுமாா் 5 மாதங்களாக மழை பெய்யவில்லை. மேலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரித்து வந்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் வரை தினமும் சுமார் 110 டிகிரி கோடை வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. இன்று (திங்கட்கிழமை) பகலில் வெயிலின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. மாலை 3 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு, மாலை 3.45 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, பேருந்து நிலையம். பன்னீர்செல்வம் பூங்கா என மாநகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்தது.

சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. திடீரென பெய்த இந்த மழையால் குளிர்மையான சூழல் நிலவுவதால் மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 111 டிகிரி வெயிலுக்காக குடை பிடித்தவர்கள், இன்று பெய்த மழைக்காக குடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதற்காக ஈரோடு மக்கள் வருண பகவானுக்கு நன்றி கூறுகின்றனர்.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!