ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை

Erode news- ஈரோடு மாவட்ட அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மக்கள் சேவை மையம்.
Erode news, Erode news today- ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அரசு பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மொத்தம் 20 ஆயிரத்து 46 பேர் உள்ளனர். இவர்களிடம் இருந்து மருத்துவ காப்பீட்டு தொகையாக மாதம் தோறும் தலா ரூ.497 தமிழக அரசு பிடித்தம் செய்து காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது. இந்த தொகை மட்டும் ஆண்டுக்கு ரூ.10 கோடி அளவுக்கு ஈரோடு மாவட்ட ஓய்வூதியர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த காப்பீட்டு தொகையில் ஓய்வூதியர்களுக்கு காசில்லா மருத்துவம் என்ற பெயரில் 4 ஆண்டுகளுக்கு சுமார் ரூ.4 லட்சம் வரை சிகிச்சை செலவுத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்ற அரசு உத்தரவு உள்ளது. ஆனால் இந்த உத்தரவை தமிழக அரசும், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனமும் 5 சதவீதம் அளவுக்கு கூட நடைமுறைப்படுத்தவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.
கடந்த மாதம் நடந்த மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இந்த மாதம் 5ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் ஓய்வூதியர்களுக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு உள்ளார். எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் காப்பீட்டு நிறுவனம் உரிய காப்பீட்டு தொகையை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஓய்வூதியர்கள் மாவட்ட சங்கத்தை 0424 22268888 (காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu