அம்மாபேட்டை அருகே காவிரி கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அம்மாபேட்டை அருகே காவிரி கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
X

கூத்தம்பட்டியில் காவிரி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கான்கிரீட் சுவர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட போது, எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கேசரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தம்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காவிரி கரையோரப் பகுதியில் மணியக்காரர் தோட்டத்தையொட்டி ஆக்கிரமித்து கான்கிரீட் சுவர் எழுப்பப்படுவதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதன்பேரில், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் கௌதம் தலைமையில் அளவீடு செய்தனர். அப்போது காவிரி கரையின் எல்லைக் கல்லில் இருந்து 400 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலத்திற்கு 3 அடி உயரத்திற்கு கான்கிரீட் பக்கவாட்டு சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து, தென்னங்கன்றுகள் நடப்பட்டு விவசாயத் தோட்டமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கான்கிரீட் சுவர் இடித்து அகற்றப்பட்டது. மேலும், கரையோர ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 2 ஏக்கருக்கு மேல் இருக்கும் என நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
why is ai important to the future