கோபி குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!

கோபி குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!
X

Erode news- குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று (20ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Erode news, Erode news today- கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று (20ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைக்கு கடம்பூர் குன்றி, விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்கம் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர் காட்டாறுகள் வழியாக அணையில் தேக்கி வைக்கப்படும்.

இந்த அணையில் மூலம் குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, இன்று (20ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் பூஜை செய்து தண்ணீர் திறந்து விட்டனர்.

இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்படும் என்றும் வலது கரையில் 8 கன அடி தண்ணீரும் இடது கரையில் 16 கன அடி தண்ணீரும், 46 நாட்களில் 10 நாட்கள் தண்ணீர் நிறுத்தப்பட்டு மொத்தம் 36 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing future