ஈரோடு: தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு

Erode news- புகார் எண்கள் வெளியீடு.
Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தேர்தல் செலவீன பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதை கண்காணிக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர் (காவல்) ராம் கிருஷ்ண ஸ்வரன்கர், தேர்தல் பார்வையாளர் (பொது) ராஜீவ் ரஞ்சன் மீனா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் ஈரோட்டிற்கு (26ம் தேதி) நேற்று முன்தினம் வந்தனர்.
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் பார்வையாளரை (பொது) 74181 40422 என்ற கைப்பேசி எண்ணிலும், தேர்தல் பார்வையாளரை (காவல்) 93615 36138 என்ற கைப்பேசி எண்ணிலும், தேர்தல் விதிமீறல் செலவினம் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் பார்வையாளர் (செலவினம்) லட்சுமி நாராயணாவை 81225 90422 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தினமும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள காலிங்கராயன் பயணியர் மாளிகையில் தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu