இந்திய விமான படையின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வு: ஈரோடு ஆட்சியர் தகவல்

இந்திய விமான படையின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வு: ஈரோடு ஆட்சியர் தகவல்
X

இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பு.

இந்திய விமானப் படையின், அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தில் நடக்கவுள்ள ஆட்சேர்ப்பு தேர்விற்கு ஈரோடு மாவட்ட இளைஞர்கள், இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின், அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தில் நடக்கவுள்ள ஆட்சேர்ப்பு தேர்விற்கு ஈரோடு மாவட்ட இளைஞர்கள், இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

இந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணைய வழியில் கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஆகும். அக்னிவீர் வாயு தேர்வுக்கு, 02 ஜனவரி 2004 முதல் 02 ஜூலை 2007 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகியோ அல்லது 9499055943, 9842404508 என்ற கைப்பேசி எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்விற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!