தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் துணை தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ் தேர்வு

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் துணை தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ் தேர்வு
X

Erode news- ஈரோடு மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலாளர் ரமேஷ். (கோப்பு படம்)

Erode news- தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் துணை தலைவராக, ஈரோடு மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Erode news, Erode news today- தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் துணை தலைவராக ஈரோடு மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் அடுத்த 4 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய நீச்சல் சங்கத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில் சங்கத்தின் தலைவராக திருநெல்வேலியைச் சேர்ந்த திருமாறன் தேர்வு செய்யப்பட்டார்.

சங்கத்தின் தற்போதைய செயலாளரும் மற்றும் பொருளாளருமான சந்திரசேகர், முரளிதரன் மீண்டும் அதே பொறுப்புக்கு தேர்வாகினர். சங்கத்தின் துணைத் தலைவராக ஈரோடு மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலாளர் ரமேஷ், தேர்வு செய்யப்பட்டார். மேலும், இணை செயலாளர்களாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில், தமிழகத்தின் நீச்சல் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் பயிற்சி அளித்து, பலவித போட்டிகளை நடத்தி வீரர், வீராங்கனையரை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் துணை தலைவராக ஈரோடு மாவட்ட நீச்சல் சங்கத்தின் செயலாளர் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டதற்கு, ஈரோடு மாவட்ட நீச்சல் சங்க பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் வீரர் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!