ஈரோடு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு

ஈரோடு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு
X

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா. உடன் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு அறை ஆகியவற்றை தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா ஆய்வு செய்தார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்றத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு அறை ஆகியவற்றை தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால், நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா ஆகியோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24X7 செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் சி-விஜில் கைப்பேசிச் செயலி மூலமாகவும் பெறப்பட்ட தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சி-விஜில் கைப்பேசிச் செயலி மூலம் 18 புகார்களும், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாக 39 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்புடைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு கண்காணிக்கப்படும் தொலைக்காட்சி செய்தி விபரங்கள், வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் தேர்தல் விதிமீறல் மற்றும் தேர்தல் தொடர்பான செய்திகள் பதிவு செய்யப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரம் முன்அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது, தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் /உதவி கண்காணிப்பு அலுவலர் (ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையம்) கலைமாமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business