ஈரோட்டில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் துவக்கிவைப்பு
மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.
மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த, அதிநவீன மின்னணு விழிப்புணர்வு வாகனம் மற்றும் பேரணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (12ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (12ம் தேதி) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அதிநவீன மின்னணு விழிப்புணர்வு வாகனம் மற்றும் பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு குடிநீர் வாடிகால் வாரியத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் விழிப்புணர்வு ஓட்டம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, இன்று (12ம் தேதி) மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பதாதைகளை ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் துவங்கி சம்பத் நகர் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் சுமார் 250 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராஜலட்சுமி, உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணன், துணை நிலை நீர் வல்லுநர் துரைசாமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu