நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணை நீர்வரத்து 3,167 கன அடியாக அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணை நீர்வரத்து 3,167 கன அடியாக அதிகரிப்பு
X

Erode news- பவானிசாகர் அணை.

Erode news- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 3,167 கன அடியாக அதிகரித்துள்ளது.

Erode news, Erode news today- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 3,167 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக நீலகிரி மலைப்பகுதி பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதி மாயாறும் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணைக்கு நேற்று (13ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,927 கன‌ அடியாக இருந்த நீர்வரத்து இன்று (14ம் தேதி) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,167 கன அடியாக அதிகரித்தது.

இதனால், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 87.10 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 87.36 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 19.75 டிஎம்சியிலிருந்து 19.91 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,800 கன அடியிலிருந்து 1,400 கன அடியாக குறைக்கப்பட்டது. பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6.6 மி‌.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil