ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகா்வோா் அமைப்புகளின் காலாண்டு கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகா்வோா் அமைப்புகளின் காலாண்டு கூட்டம்
X

பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் மூன்றாவது காலாண்டு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோட்டில் பதிவுபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான மூன்றாவது காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான மூன்றாவது காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (22ம் தேதி) நடைபெற்றது.


மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், மூன்றாவது காலாண்டு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு கேபிள் டிவி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், உணவுப்பொருட்களில் கலப்படம், கேபிள் டிவி கட்டணம் அதிகமாக வசூலித்தல், கழிவுநீர் வடிகால் அமைத்தல் சந்தை புதுப்பித்தல் உள்ளிட்ட 25 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில், இன்று நடைபெற்ற மூன்றாவது காலாண்டு கூட்டத்தில் இம்மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அடுத்த காலாண்டு கூட்டத்திற்குள் தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story