புதுச்சேரி டூ கோபி.. கார் ஷெட்டில் பதுக்கல்: ஜோதிடரை மடக்கிப் பிடித்த போலீஸ்

புதுச்சேரி டூ கோபி.. கார் ஷெட்டில் பதுக்கல்: ஜோதிடரை மடக்கிப் பிடித்த போலீஸ்
X

கைது செய்யப்பட்ட குபேந்திரன் பிரபு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களுடன் கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்.

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, ஈரோடு மாவட்டம் கோபியில் வீட்டின் கார் ஷெட்டில் பதுக்கி வைத்து மது விற்ற ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, கோபியில் வீட்டின் கார் செட்டில் பதுக்கி வைத்து மது விற்ற ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், காவல் ஆய்வாளர் கலையரசி மற்றும் போலீசார் கோபி கவின் கார்டன் பகுதியில் வசித்து வரும் ஜோதிடர் குபேந்திரன் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வீட்டை ஒட்டி இருந்த கார் செட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 756 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 ஆயிரத்து 600 ஆகும்.

அதனைத் தொடர்ந்து, போலீசார் குபேந்திரன் பிரபுவிடம் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்து, கார் செட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் குபேரந்திரன் பிரபுவை கைது செய்து, 756 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வர பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai as the future