ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 19.44 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இன்று (05.01.2023) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டு தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2023-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2222 வாக்கு சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்கு சாவடி அமைவிடங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களிலும் வருகிற 8.12.22-ந் தேதி வரை பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அனைத்து தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 06.01.2022 முதல் 05.01.2023 வரை பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம்-6 (சேர்த்தல்), படிவம்-7 (நீக்கல்), படிவம்-8 (திருத்தம்) மற்றும் (இடமாற்றம்) ஆகிய படிவங்களை விசாரணை செய்து இறுதி வாக்காளர் பட்டியலானது இன்று (05.01.2023) வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொது மக்கள் பார்வையிடலாம் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி 62.14 சதவீதம் முடிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்களில் 110713 ஆண் வாக்காளர்களும், 116140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 2,26,898 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 101 இடங்களில் 302 வாக்குச்சாவடி மையங்களில் 145,202 ஆண் வாக்காளர்களும், 152016 பெண் வாக்காளர்களும், 40 இதர வாக்காளர்களும், 42 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 297300 வாக்காளர்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 147 இடங்களில் 277 வாக்குச்சாவடி மையங்களில் 109675 ஆண் வாக்காளர்களும், 119221 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும், 31 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 228940 வாக்காளர்களும் உள்ளனர்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 153 இடங்களில் 264 வாக்குச்சாவடி மையங்களில் 111358 ஆண் வாக்காளர்களும், 118739 பெண் வாக்காளர்களும், 08 இதர வாக்காளர்களும், 19 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 230124 வாக்காளர்களும், பவானி சட்டமன்ற தொகுதியில் 122 இடங்களில் 289 வாக்குச்சாவடி மையங்களில் 115961 ஆண் வாக்காளர்களும், 120474 பெண் வாக்காளர்களும், 17 இதர வாக்காளர்களும், 57 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 236509 வாக்காளர்களும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 122 இடங்களில் 261 வாக்குச்சாவடி மையங்களில் 105113 ஆண் வாக்காளர்களும், 108573 பெண் வாக்காளர்களும், 17 இதர வாக்காளர்களும், 61 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 213764 வாக்காளர்களும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 127 இடங்களில் 296 வாக்குச்சாவடி மையங்களில் 121331 ஆண் வாக்காளர்களும், 131814 பெண் வாக்காளர்களும், 09 இதர வாக்காளர்களும், 25 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 253179 வாக்காளர்களும் உள்ளனர்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 127 இடங்களில் 295 வாக்குச்சாவடி மையங்களில் 125306 ஆண் வாக்காளர்களும், 132128 பெண் வாக்காளர்களும், 21 இதர வாக்காளர்களும், 18 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 257473 வாக்காளர்களும் என ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 8 சட்டமன்ற தொகுதியில் 951 இடங்களில் 2222 வாக்குச்சாவடி மையங்களில் 944659 ஆண் வாக்காளர்களும், 999105 பெண் வாக்காளர்களும், 148 இதர வாக்காளர்களும், 275 இராணுவ வாக்காளர்கள் (SERVICE ELECTORS) என மொத்தம் 19,44,187 வாக்காளர்கள் உள்ளனர்.05.01.2022 அன்று மொத்த வாக்காளர்கள் 19,87,244, புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 29,240, நீக்கம் செய்யப்பட்டவர்கள் 30,908. 05.01.2023 அன்று நிகர வாக்காளர்கள் 19,43,912 உள்ளனர்.

இந்நிகழ்ச்சியல் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, பயிற்சி ஆட்சியர் பொன்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் (ஈரோடு) சதீஷ்குமார், (கோபி) திவ்யபிரியதர்ஷினி, வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story