ஈரோடு புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு
Erode News- மாணவர்கள் எழுதிய நூல்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்ட போது எடுத்த படம்.
Erode News, Erode News Today- ஈரோடு புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் எழுதிய நூல்கள் நேற்று (3ம் தேதி) வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு அரசும் மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் 20வது ஈரோடு புத்தகத் திருவிழா 2024 ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவையொட்டி, புத்தகத் திருவிழா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூல் வெளியீட்டு அரங்கில், இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி எழுதிய 3 நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (3ம் தேதி) நடைபெற்றது.
இம்மூன்று நூல்களையும் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். இந்நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி தலைமை தாங்கினார். தூத்துக்குடி குமிழ்முனை பதிப்பகம், புத்தகப் பதிப்பாளர் ஜே.சைமன் முன்னிலை வகித்தார்.
மாணவர் மகே.கௌதம் எழுதிய காவிரியின் மை' என்ற சிறுகதை தொகுப்பு நூலின் முதல் பிரதியை வரலாற்று ஆசிரியர் அ.இளங்கோவனும், சி.பூமிகா (பெண்பா) என்ற மாணவி எழுதிய 'புரியாத பிரியம்' என்ற நாவலின் முதல் பிரதியை ஈரோடு கொல்லம்பாளையம் நூலகர் கலைச்செல்வியும், செ.முகிலன் (கார்முகில்) என்ற மாணவர் எழுதிய கிறுக்கல்கள் எனும் கவிதைத் தொகுப்பு நூலின் முதல் பிரதியை வரலாற்று பேராசிரியர் ஆ.குருசாமியும் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பா.கார்த்தி வரவேற்புரையும், முடிவில் ச.திவ்யஸ்ரீ நன்றியுரையும் ஆற்றினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu