அந்தியூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போலீசார்

அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையத்தில் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக, இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து மைக்கேல்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.ஆனால், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று, அதிமுக சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் அந்தோனிசாமி தலைமையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மைக்கேல் பாளையம் நால்ரோடு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட ஒன்று திரண்டனர்.தகவலறிந்த அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி மற்றும் பஞ்சாயத்து எழுத்தர் சுப்ரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையின் முடிவில் இனிவரும் காலங்களில் உரிய நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்வதாக, பஞ்சாயத்து சார்பில் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!