பெருந்துறையில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
Erode News- காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம்.
Erode News, Erode News Today- பெருந்துறையில் நலிவடைந்த காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாத கால சிகிச்சை முடியும் வரையில் தமிழ்நாடு அரசின் மூலமாக உதவித்தொகையாக மாதந்தோறும் ரூபாய் 500 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும், நிக்சய் மித்ரா திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் மூலமாக நலிவடைந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள காசநோயாளிகளுக்கு சிகிச்சை காலம் முடியும் வரை ஆறு மாத காலம் மாதந்தோறும் ஊட்டச்சத்து பெட்டகம் கொடையாக பெற்று வழங்கப்படுகிறது.
அதன்படி, நேற்று (23ம் தேதி) ஈரோடு மாவட்ட துணை இயக்குனரின் (காசநோய் பணிகள்) ஆலோசனையின் பேரில் பெருந்துறை அரசு மருத்துவமனையில் நலிவடைந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 35 நபர்களுக்கு சிப்காட் (Marico Limited) தனியார் நிறுவனம் மூலமாக ஆறு மாத காலத்திற்கு ஊட்டச்சத்து பெட்டகம் மாதந்தோறும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பெருந்துறை அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் சாந்தி, சிப்காட் தனியார் நிர்வாக மேலாளர் மணிரத்னம் மற்றும் அலுவலர்கள், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் அலுவலக மாவட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சுரேஷ், காசநோய் ஒழிப்புத் திட்ட அலுவலர்கள் மற்றும் நலிவடைந்த காச நோயினால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu